PG TRB EXAM Tamil Eligibility Test (12-10-2025) Answer Key 2025

 




PG TRB EXAM Tamil Eligibility Test
(12-10-2025) Answer Key 2025

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத் தேர்வு (12-10-25) 2025

தமிழ் தகுதித் தேர்வு வினா விடைகள்


1. மாறன் தன் நண்பன் இனியனிடம் "இந்த மாறன் ஒரு நாளும் நேரம் தவறமாட்டாள்" என்று கூறுவது:


(A) மரபு வழுவமைதி


(B) கால வழுவமைதி


(C) இட வழுவமைதி


(D) பால் வழுவமைதி


Ans:

(C) இட வழுவமைதி





2. 'வானம் வசப்படும்' என்ற பிரபஞ்சனின் படைப்பு:


(A) கவிதை நூல்


(B) வரலாற்றுப் புதினம்


(C) சிறுகதைத் தொகுப்பு


(D) சூழலியல் கட்டுரை


Ans:

(B) வரலாற்றுப் புதினம்



3. கால வழுவமைதியைத் தேர்க.


(A) இந்த மகிழன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்..


(B) தமிழினி இரவு சோறு உண்டான்.


(C) வீட்டில் காகம் கத்தினால் உறவினர் வருவர்


D) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.


Ans:

D) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.


4. கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலரைத் தேர்க


A) நெருஞ்சி மலர்


B) பூளை மலர்.


C)பலா மலர்


D) கள்ளி மலர்


Ans:

C)பலா மலர்



5. பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரமயோகி விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்"


இவ்வடிகளில் பாண்டியனைக் குறிக்கும் சொல்லைத் தேர்க


(A) பரமயோகி


(B) மீனவன்


(C) பெருந்தகை


(D) வானோர்


Ans:

(B) மீனவன்



6.பொருத்துக


(a) காலக்கணிதம்


(b) மேகம்


(c) காசிக்காண்டம்


(d) பரிபாடல்


(i) கீரந்தையார்


(ii) அதிவீரராம பாண்டியன் 


iii) கண்ணதாசன்


(iv) நாகூர்ரூமி


(A) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)


B) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)


(C) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)


(D) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)


Ans:

B) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)



7. பொருத்துக:


(a) வீசு தென்றல்


(b) நன்மொழி


(c) அண்ணன் தம்பி


(d) சாரைப் பாம்பு


(i) பண்புத் தொகை

(ii) உம்மைத் தொகை (iii)இருபெயரொட்டுப் பண்புத் தொகை

(iv) வினைத் தொகை


(A) (a)-(iv), (b)-(ii), (c)-(i), (d)-(iii)


(B) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)


C) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)


(D) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)


Ans:

C) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)



8. அரசனின் கல்வி, வீரம், செல்வம். புகழ், கருணையைப் பாடுவது


A) பெருந்திணை


B) வாகைத் திணை


C) பொதுவியல் திணை


D)பாடாண்திணை


Ans:

D)பாடாண்திணை


9. அகவற்பாவுக்குப் பொருந்தாத நூலைத் தேர்க.


A) மணிமேகலை


B) சிலப்பதிகாரம்


C) பெருங்கதை


D) நாலடியார்


Ans:

D) நாலடியார்


10. 'உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு' இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள பண்புத் தொகைச் சொல்லைத் தேர்க.


A) ஊழி ஊழ்


B) உந்து வளி


C) ஊழியும்


D) செந்தீ


Ans:

D) செந்தீ


11. கொற்கையின் அரசனாகவும், புலவராகவும் இருந்தவர் :


(A) செங்குட்டுவன்


(B) நெடுஞ்செழியன்


(C)கீரந்தையார்


(D) அதிவீரராம பாண்டியன் 


Ans:

(D) அதிவீரராம பாண்டியன் 



12. கோபல்லபுரத்து மக்கள் என்ற புதினம் :


(A) பெண் விடுதலையைப் பின்னணியாகக் கொண்டது.


(B) பழந்தமிழர் பண்பாட்டினை மைய மாகக் கொண்டது.


(C) விளிம்புநிலை மக்கள் வாழ்வை மையமாகக் கொண்டது.


(D) இந்திய விடுதலைப் போராட்டத்-தைப் பின்னணியாகக் கொண்டது.



Ans: (D) இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது.


13. "உனக்குப் படிக்கத் தெரியாது"

என்ற நூல் யாரை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.


(A) மருத்துவர் முத்துலெட்சுமி


(B) மேரி மெக்லியோட் பெத்யூன்


(C) கமலாலயன்


(D) மிஸ் வில்ஸன்


Ans:

(B) மேரி மெக்லியோட் பெத்யூன்



14. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' என்னும் உரிப்பொருளுக்குரிய திணை :


A)நெய்தல்

B)குறிஞ்சி

C) பாலை

D) மருதம்


Ans:

A)நெய்தல்


15. கோவலன் கண்ணகி கதையைக் கூறி 'அடிகள் நீரே அருளுக' என்றவர் :


(A) கம்பர் 


(B) சீத்தலைச் சாத்தனார் .


(C) இளங்கோவடிகள்


(D) வீரமாமுனிவர்


Ans:

(B) சீத்தலைச் சாத்தனார்



16. 'எற்பாடு' என்பது


(A) பிரிதலும் பிரிதல் நிமித்தமும்


(B) முன்பனிக்காலம்


(C) ஞாயிறு மறையும் நேரம்


(D) காலை 6 மணி முதல் 10 மணி வரை


Ans:

(C) ஞாயிறு மறையும் நேரம்


17. "இல் நுழை கதிர்" என்னும் சொல்லின் பொருளினைத் தேர்ந்தெடுக்க.


(A) இல்லத்துள் நுழையும் விளக்கின் ஒளிக்கற்றை


(B) இல்லத்துள் நுழையாத விளக்கின் ஒளிக்கற்றை


(C) இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக்கற்றை


(D) இல்லத்துள் நுழையாத கதிரவனின் ஒளிக்கற்றை


Ans:

(C) இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக்கற்றை


18. 

கூற்று (1): வலிமையை நிலைநாட்ட நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற அரசர்' தும்பைப் பூவைச் சூடி மகிழ்வர்.


கூற்று (2): வெற்றி ஒன்றையே

குறிக்கோளாகக் கொண்ட பகையரசர்கள் இருவர் தத்தம் வலிமையை நிலைநாட்ட வாகைப் பூவைச் சூடி மகிழ்வர்.


(A) கூற்று (1), (2) இரண்டும் சரி


(B) கூற்று (1), (2) இரண்டும் தவறு


(C) கூற்று (1) சரி, கூற்று (2) தவறு


(D) கூற்று (1) தவறு, கூற்று (2) சரி


Ans:(B) 

கூற்று (1), (2) இரண்டும் தவறு


19. இலையின் பெயரைக் சொல்லைத் தேர்ந்தெடுக்க. குறிக்காத


(A) தாள்

(B)கழை.

(C) ஓலை 

(D) தோகை


Ans:(B)கழை


20. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று அளித்த உணவாகச் சிறுபா-ணாற்றுப்படை குறிப்பிடும் உணவு:


(A) தினைச் சோறு


(B) குழல் மீன் கறி


(C) தேனும் தினைமாவும்


(D) ஊன் சோறு

Ans:

(B) குழல் மீன் கறி

21. தீண்டாமைக்கு எதிராக நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர்:


(A) பாரதிதாசன்


(B) திரு.வி.க.


(C)அம்பேத்கர்


(D) பெரியார்


Ans:

(C)அம்பேத்கர்


22. வடமொழிக் கதையைத் தழுவி எழுதப்-பட்ட நூல் :


(A) சீவகசிந்தாமணி.


(B) சிலப்பதிகாரம்


(C) மணிமேகலை


(D) பெரியபுராணம்


Ans:

(A) சீவகசிந்தாமணி.


23. பொதுமொழியைத் தேர்க.


(A) கண்ணன்


(B) படித்தான்


(C) வேங்கை


(D) மலர்


Ans:

(C) வேங்கை


24. 'கலைஞர்' என்னும் சிறப்புப் பெயர் மு. கருணாநிதிக்கு வழங்கப்பட்ட விழா


(A) 'பழநியப்பன்' நாடகப் பாராட்டு விழா


(B) செம்மொழி மாநாட்டு விழா


(c) தூக்கு மேடை நாடகப் பாராட்டு விழா


(D) பராசக்தி வெற்றி விழா


Ans:

(c) தூக்கு மேடை நாடகப் பாராட்டு விழா


25. பாவலரேறுவால் பாடப்பட்டுத் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது ?


(A) நூறாசிரியம்


(B) மகபுகு வஞ்சி


(C) உலகியல் நூறு


(D) திருக்குறள் மெய்ப்பொருளுரை


Ans:

(D) திருக்குறள் மெய்ப்பொருளுரை


26. எதிர்மறைத் தொழிற்பெயரைத் தேர்க.


(A) வாழ்க்கை


(B) நடவாமை.


(C) ஈதல்


(D) காட்சி


Ans: (B) நடவாமை.



27. 'வேம்பு, ஆமணக்கு' இவற்றைக் குறிக்கும் சொல்:


(A) கூலம்


(B ) முத்து


(C) விதை


(D) முதிரை


Ans:

(B ) முத்து


28. 'விருந்தே புதுமை' என்றவர் :


(A) தொல்காப்பியர்.


(B) இளங்கோவடிகள்


(C) கம்பர்


(D) திருவள்ளுவர்


Ans:

(A) தொல்காப்பியர்.


29. 

கூற்று (1): ஆசிரியப்பா ஏகாரத்தில் முடிவது சிறப்பு.


கூற்று (2) : இரண்டடி முதல் பன்னிரண்டு அடிவரை அமைவது ஆசிரியப்பா ஆகும்.


(A) கூற்று (1), (2) இரண்டும் சரி


(B) கூற்று (1) சரி, கூற்று (2) தவறு


(C) கூற்று (1) தவறு, கூற்று (2) சரி


(D) கூற்று (1), (2) இரண்டும் தவறு


Ans:

(B) கூற்று (1) சரி, கூற்று (2) தவறு


30. சங்ககாலப் பெண்களைப்போலவே. இக்காலப் பெண்களும் கல்விகற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பெறவேண்டும் என்றவர்:


(A) பாரதியார்


(B) திரு.வி.க


(C) கவிமணி.


(D) அயோத்திதாசர்


Ans:

(D) அயோத்திதாசர்



நன்றி

வாழ்த்துக்கள்❤️

No comments

Powered by Blogger.