தோழியின் டைரி 📝ரிதம் -1🕊️
தோழியின் டைரி 🦋-1 📝
🕊️ரிதம்
இணைந்து வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்கிற கார்த்திகேயனின் கோரிக்கையை முதலில் மறுத்துவிட்டு பின்னர் பரிசீலனை செய்வாள் சித்ரா. சரி சேர்ந்து வாழலாம் எனும் முடிவை அவனிடம் சொல்வதற்கு ஆயத்தமாகி அழைத்து சந்திக்க நேரம் குறிப்பார்கள், அதற்குள் அவளது மாமியார் வந்து ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். அவளுக்கு சூழ்நிலைக் கைதியான நிலை.
கார்த்திகேயனுக்கோ அவள் ஊரை விட்டுச் செல்வதைச் சொல்லத்தான் தன்னை அழைத்திருக்கிறாள். பழகிய பழக்கத்திற்காகவாவது சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம் எனும் அதிருப்தி.
அதுவரைக்கும் பெரிதாக எந்த உணர்வாகவும் திரளாத இப்பழக்கம், காதலாகிவிடும் கணம் ஒன்று வருகிறது, கார்த்திகேயன் பணிபுரியும் செய்தித்தாள் நிறுவனத்தில் பெரிய விபத்து ஏற்பட்டிருப்பது தலைப்புச் செய்தியாகிறது. ஏற்கனவே எல்லாமுமாக வாழ்வில் நின்ற ஒருவனை விபத்தி பறிகொடுத்த ஒருத்தி இந்த ஒருவனுக்காக செய்தி நிறுவனத்திற்கு அழைத்து விசாரித்து அவனுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை என்பதை அழுகையும் பதட்டமுமாய் உறுதி செய்துகொள்கின்ற இந்த இடம்!
"அன்பிற்கு ஏதும் தெரியாது
சேருமிடம் இல்லாமல் தொலைந்து நின்று
குரல் விம்மி அழுகை முழுங்கி,
எங்காவது எப்படியாவது நீ
நல்லாயிருந்துவிடு என்னும்
பிரார்த்தனைகளைத் தவிர"
அதே பிரார்த்தனையைத்தான் கார்த்திகேயனின் பெற்றோரும் வைத்திருப்பர். நம்ம காலத்துக்கு அப்பறம் அவன் தனியாகிடக் கூடாது, நற்றுணையோடு நல்லா இருந்துவிட வேண்டும் எனும் ஆவல். அதனை இறுதிக் காட்சியில் வசனங்களே இன்றி கண்ணீரில் கடத்துவார் நாகேஷ்.
ஆனந்த நிம்மதி.
நன்றி ...
எழுத்தாளர் கார்த்திக் அவர்களின் முகநூல் படைப்பில் இருந்து....
No comments